Thursday, October 29, 2015

கலைஞரின் மஞ்சள் துண்டும் அதன் வரலாறும்

கலைஞரை வசைபாட நினைப்போர் அதிகமாக உபயோகிக்கும் வார்த்த மஞ்ச துண்டு..
சரி ஏன் வந்தது ? ஏதற்க்காக வந்தது?? அந்த மஞ்ச துண்டின் வரலாறு என்ன??? இதற்கு எல்லாம் கலைஞரை விட வன்னிய சங்க நிறுவனர் டாக்டர் ராமதாசிற்கு மிக நன்றாக தெரியும்.

80களில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டிற்காக பல போராட்டங்களை செய்து கொண்டிருந்தர்கள். மரம் வெட்டினார்கள், கடுமையான போராட்டங்கள். இருந்தும் மறைந்த திரு MGR ஆட்சியில் ஒன்றும் கிடைக்கவில்லை..பல கைதுகள், பலருக்கு குண்டர் சட்டம்..
சரி அடுத்து கவர்னர் ஆட்சி..அதிலும் வன்னியர்கள் போராட்டத்தில் வன்னியர்கள் தாக்கப்பட்டனர். வன்னியர்களும் திருப்பி தாக்கினார்கள். பல பேர் பாதிக்கப்பட்டனர்..

திரும்பவும் கலைஞர் ஆட்சி 1989ம் ஆண்டு வந்தது..வந்தவுடன் முதல் அரசானையாய் மிகவும் பிற்படுத்தபட்டவர் பட்டியல் என்று ஒன்று வெளியிட்டு அதில் வன்னியர்களையும் இனைத்து 20 சதவீதம் கொடுத்தார்..வன்னியர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்..

அதன் விளைவாக அப்போது வன்னியர் சங்க நிறுவனரான திரு ராமதாஸ் அவரகள் திண்டிவனத்தில் கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்..அதில் ராமதாஸ் "வன்னியர் சங்கத்தின் கொடியை பார்தீர்களேயானால் மஞ்சள் கொடியில் அக்னி சட்டி இருக்கும்..மஞ்சள் நிறம் வன்னியர்களின் நிறம்..வன்னியரின் ஆத்தாம்ர்த்த மஞ்சள் நிறத்தை கொண்ட துண்டை, எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்த சமூக போராளிக்கு போர்த்துவதில் பெரு மகிழ்ச்கி அடைகிறேன்" வெகுவாக என்று மஞ்சள் துண்டை போர்த்தினார்..அன்று ராமதாசால் போடப்பட்ட மஞ்சள் துண்டு கலைஞருக்கு பிடித்து போய்விட்டது..சிலருக்கு சில நேரங்களில் சிலது பிடித்து போய்விடும்.அதுபோல அதிலிருந்து மஞ்சள் துண்டை போட ஆரம்பித்தார்.1989ம் ஆண்டுக்கு முன் அவர் மஞ்சள் துண்டை அனிந்ததே இல்லை..

இந்த வரலாறு தெரியாமால், "மஞ்ச துண்டு, மஞ்ச துண்டு" என்று கிண்டல் கேலி பேசும் பலர் அந்த நேரத்தில் சிறுவராகவே இருந்துருப்பீர்கள்..இது தெரிய வாய்ப்பில்லை,,ஏன் இன்று இருக்கும் பல திமுக உடன்பிறப்புக்களுக்கு கூட தெரியாது.

நீங்கள் சொல்வதைபோல் போலி நாத்திகவாதியாய் கலைஞர் தன்னை நடித்துகொண்டிருப்பாராயேனால், இந்த மஞ்ச துண்டையும் இவ்வளவு விமர்சனகளுக்கு இடையில் தூக்கி வீசி எரிந்து, போலியாய் தன்னை காட்டி இருக்க முடியும்.அடுத்தவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்..என் மனதிற்க்கு இது மஞ்சள் துண்டு அருமையாய் இருக்கிறது, அடுத்தவர் விமர்சனம் செய்வதை பற்றி கவலை இல்லைன்ற தன் பகுத்தறிவால் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து மஞ்சள் துண்டையே அனிந்து கொண்டிருக்கிறார்...

கலைஞர் கொடுத்த அந்த 20 சதவீத இடஒதுக்கீட்டால் இன்று வன்னியர்களில் பலர், டாக்டர்களாகவும், எஞ்சினியர்களாகவும், மெத்த படித்தவர்களாகவும் இருக்கிறார்கள்..
கலைஞரின் மஞ்சள் துண்டு என்பது , என்னை பொருத்தவரை ஒரு சமூக நீதிக்காக அவருக்கு கிடைத்த ஒரு சின்னம்..

"கலைஞரின் மஞ்சள் துண்டு என்பது ஆத்திகம் அல்ல, அது சமூக நீதியின் சின்னம்"

முக நூலில் 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி என்னால் எழுதப்பட்டது ..

அதன் லிங்க்
https://www.facebook.com/photo.php?fbid=3237294004449&set=a.1571712965964.2074714.1029710751&type=3&theater

இளைய மகன் அகில்

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு சேர்ந்ததும் இரண்டாவது படிக்கும் எனது இளைய மகன் அகில் ஓடிவந்து,
"அப்பா, இன்னைக்கு என் கிளாஸ்ல ஒரு விஷயம் நடந்துச்சி" என்று துள்ளலுடன் கூறினான்.
"என்ன செல்லம் நடந்துச்சி" என்று கேட்டபடியே வீட்டின் உள்ளே நுழைந்தேன்.
"அப்பா, என் கிளாஸ்ல திவாகர் இருக்கான்ல, அவன் குறும்பு பண்ணான், உடனே எங்க மிஸ் அவனை வெளியே அனுப்பி நிக்க வச்சிட்டாங்க" என்று சோகமாக கூறினான்..
"ஓ, அப்படியா, என்ன செஞ்சான் அவன்? " இது நான்
"அவன் பக்கத்துல இருந்த என்னோட இன்னொரு ஃபிரண்டின் பென்சிலை தூக்கி வீசிட்டான், அதை மிஸ் பார்த்துட்டாங்க, அதான் கோவம் வந்து வெளிய நிக்க வச்சிட்டாங்க" என்று கூறினான்..
இவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் "சரி, அப்பறம் என்ன நடந்தது" என்று கேட்டேன்..
அதற்கு அவன்," அப்பா அவனை வெளிய நிக்க வச்ச உடனே எனக்கு ரொம்ப கஷ்டமாயிடிச்சி, 'என்னடா பண்ணலாம்'னு யோசிச்சேன்.. ஒரு யோசனை வந்தது..உடனே மிஸ் கிட்ட," மிஸ் அவன் செஞ்சது சின்ன தப்புதான், அவனை உள்ள கூப்பிட்டு உக்கார வையுங்க" என்று சொன்னேன்..
உடனே மிஸ்," தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கனும், அவன் வெளியவே நிக்கட்டும் "ன்னு சொன்னாங்க ..
நான் உடனே மிஸ்கிட்ட, "மிஸ் அவன் சின்ன பையன்தானே.. அவன் செஞ்சது தப்புதான், தெரியாம செஞ்சிட்டான், அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன், ப்ளீஸ் அவனை உள்ள கூப்பிடுங்க" என்று சொன்னேன்..
உடனே மிஸ் பயங்கரமா சிரிச்சிட்டு என் கண்ணத்தை தட்டி கொடுத்து, "பரவாயில்லையே, இந்த சின்ன வயசுல நல்ல விஷயம் பண்ற" ன்னு சொன்னாங்க..
இந்த இடத்தில் நானும் என் மனைவியும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டோம் ..அவன் தொடர்ந்து
"எங்கப்பா இப்படிதான் சொல்லி கொடுத்துருக்காரு"ன்னு சொன்னேன்..உடனே மிஸ்" சூப்பர்" என்று சொல்லிவிட்டு அவனை உள்ளே கூப்பிட்டு கிளாசில் உட்க்கார வைத்து விட்டு, என்னக்கு ஒரு சின்ன கிஃப்ட் கொடுத்தாங்க"
"மிஸ் எனக்கு இது எல்லாம் வேனாம்"ன்னு சொன்னேன்..
அதுக்கு அவங்க," இல்லடா, நீ நல்ல விஷயம் பன்ன, அதான் கொடுக்கிறேன்"ன்னு சொன்னாங்க..
நான் உடனே மிஸ் கிட்ட," மிஸ் நான் என் கடமையை தான் செய்தேன், எனக்கு இது வேண்டாம்"ன்னு சொல்லிட்டேன்ப்பா " என்று அக மகிழ்வுடன் பெருமிதமாக கூறி முடித்தான்..
எனக்கும் என் மனைவிக்கும் அடக்க முடியாத சிரிப்பு, கொஞ்சம் கர்வமுடன்..
இதைத்தானே குழந்தைகளிடம் எதிர்ப்பார்க்கிறோம்..
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

கலைஞரும் கச்ச தீவும்!

கச்சதீவு கலைஞரால் தான் தாரை வார்க்கப்பட்டது என்று பொய்யும் புரட்டும் பேசிவருபவர்களுக்கு கச்ச தீவை மீட்டெடுப்பதற்காக தற்போது ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு எடுத்து வைத்த வாதமே "கலைஞருக்கும் கச்ச தீவு நம் கைவிட்டு போனதற்கும் சம்மந்தமே இல்லை" என்று நிருபணமாகிறது. தமிழக அரசு எடுத்து வைத்த வாதம் இதுதான்
--------------------------------------------------------------------------------
"மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அந்த மாநிலத்தின் ஒரு பகுதியை மத்திய அரசு வேறு நாட்டுக்கு வழங்கினால் அது செல்லாது" என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஆகையால் அன்றைய தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி , தமிழ அரசின் ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு, கச்ச தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு" என்றும் அதற்கு ஆதாரமாக அன்றைய திமுக ஆட்சியால் "கச்சதீவை கொடுக்ககூடாது" என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே காட்டியுள்ளனர்.
--------------------------------------------------------------------------------
ஆகையால் உண்மை இப்படி இருக்க திமுகவை வசைபாட, கலைஞரை திட்ட கச்ச தீவை கலைஞர் தாரை வார்த்தார் என்று புளுகுகிறார்கள்.
அன்று கட்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது கலைஞர் அது சம்பந்தமாக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத இரண்டு கட்சிகள், ஒன்று காங்கிரஸ் மற்றொன்று அதிமுக.

அதே போல் கச்ச தீவை இலங்கையிடம் கொடுப்பதற்கு காரணமாயிருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து அதற்கு துனைபோனவர்தான் இன்று கச்ச தீவு வேண்டும் என்று அடம் பிடிக்கும் பழ. நெடுமாறன். ஆனால் அப்போது கச்ச தீவை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞரால் பல இடங்களில் கண்டன ஆர்பாட்டங்களும் கூட்டங்களும் நடத்தப்பட்டன.. இணைப்பை பாருங்கள்

வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்.. எவரோ சொன்னால் ஆட்டுமந்தகளாக பின்னால் ஆமாம் சாமி போடாதீர்கள்..