Monday, May 30, 2016

வைக்கோலாய் எரியும்!

அரசியல் அனாதை வைகோவின் துரோகம் பற்றி கலைஞர் கவிதை!




















ஊமையாக இரு என்றால்
என் பேச்சைக் கேட்காமல்
உளரித் தொலைத்துவிட்டு
ஓராண்டா இராண்டா எனத் தெரியாமல்
உள்ளே இருக்கின்ற மனுஷனையே
மெல்ல வெளியே கொண்டுவர
ஒரு கோடி கையெழுத்து எமக்கு தேவை
என எத்தனை கனிவோடு பணிவோடு
எல்.ஜி.என்பார் என்னை அனுகினார் அன்று!





















இன்றோ நீ என்மேல் எடுத்து வீசுவேன்
பிரம்மாஸ்திரம் என்று பிதற்றி திரிகின்றாய்.
எத்தனை அஸ்திரங்கள் துளைத்த இதயம்பார் இது.
அத்தனையும் முனைமழுங்கிப் போனதேயன்றி
சொத்தை பல் விழுவது போல் என் சுயசரிதை
பொத்தென்று வீழ்ந்ததில்லை வீடணாரே புரிந்து கொள்க!
பல தகவல்கள் கைவசம் உண்டென்கிறீர்
சில தகவல் உம்மைப்பற்றிச் சொன்னாலே சிரிக்கும் உலகம்.


அரசியல் அநாதை வைகோ 


























அன்றொருநாள் குமரிக்கடல் விடுதியிலே
ஆர்க்காட்டார் துரைமுருகன் இருவரிடமும்
அடுத்த தலைவர் தி.மு.க வில் நான்தானென்று
அவர்களிருவரையும் அயர வைத்த நேரம் அது
அவசரப்படாமல் பொறுத்திடுக.
ஆகலாம் தலைவராக அண்ணன்
கலைஞரின் காலத்திற்குப் பின்னால் என
நயமுடன் அவர்கள் உரைத்த போது
"அண்ணன் கலைஞர் அய்யா பெரியார் போல்
அந்த மூதறிஞர் ராஜாஜி போல் ஆயுள் தொண்ணூறுக்கு மேலும்
உயிரோடு இருந்து விட்டால்?" என்று
பதைத்துப்போய் நீவிர் கேட்க, கேள்வியை
புதைத்து வைத்து ஈராண்டுக்குப் பின்
அவர்கள் வெளியிட்ட சேதி கூட நான்கு
சுவர்களுக்குள்தான் இதுவரை இருந்தது.
இன்று நீர் பிரம்மாஸ்திரம் பிதற்றல் காட்டியதால்
நன்று நாமும் ஒரு அஸ்திரம் விடலாமென்று
உதாரணத்திற்கு ஒன்றை எடுத்து விட்டுள்ளேன் - இன்னும்
ஓராயிரம் கணைகளுண்டு, உமக்கே தெரியும்,
உண்மைகள் பற்பல விரியும் - உம்
பொய்மைகள் தீயிட்ட - வைக்கோலாய் எரியும்!




Wednesday, November 4, 2015

கமலும் கருத்துரிமையும்!

அன்புள்ள கமல்!
உங்கள் அதி தீவிர ரசிகன் எழுதுவது. நலம் நலமறிய ஆவல். தாங்களின் தூங்காவனம் திரைப்படம் எந்த சிக்கலும் இல்லாமல் தீபாவளிக்கு வெளிவந்து வெற்றியடைய வாழ்த்துகள். நிற்க
உங்களின் விஸ்வரூபம் திரைப்படம் வெளி வந்தபோது பல பிரச்சனைகளையும் சொல்லொன்னா துயரங்களையும் அனுபவித்தீர்கள்.. அன்று மிகக் கடுமையாக "இருக்கும் சூழ்நிலையில் கருத்துரிமையை நசுக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை" என்று நெஞ்சுரம் கொண்டு பேசினீர்கள் (நெஞ்சுரம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் இந்நாள் வரை)

அன்று பல்லாயிரக்கணக்கானோர் உங்களின் கருத்துரிமைக்காக உங்கள் பின் வந்தார்கள்.. கொதித்தெழுந்து அரசுக்கு எதிராக பேசினார்கள்.. உங்கள் படமும் வெளிவந்தது. வெற்றியடைந்தீர்கள்.. போட்ட காசை விட அதிகம் சம்பாதித்தீர்கள். அன்று உங்கள் பின்னால் வந்தவர்கள் எல்லாம் கமல் என்ற தனி மனிதனுக்காக வரவில்லை. கருத்துரிமையை காக்க வந்தவர்கள். அன்று எவரும் உங்களுக்காக வரவில்லையென்றால் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கருத்துரிமைக்காக பலர் போராடியதால் இன்று தாய் நாட்டில் இருக்கிறீர்கள்.

அன்று கருத்துரிமைக்காக பேசிய நீங்கள், "நாட்டைவிட்டு வெளியேறுவதை தவிற வேறு வழி இல்லை" என்று சொன்ன நீங்கள் இன்று "இந்தியாவில் சகிப்பின்மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரும் கலைஞர்கள் தங்கள் விருதுகளை திருப்பிக் கொடுப்பது அரசையும், விருதுகொடுத்தவர்களையும் அவமதிக்கும் செயல், அதை நான் செய்யப்போவதில்லை, விருதை திருப்பித் தருவதால் பலனொன்றும் இல்லை" என்று திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள்.
"நான் திருப்பித் தரவில்லை" என்று மட்டும் சொல்லி இருந்தால் அது உங்கள் உரிமை என்று ஒதுங்கி போய்விடலாம்..ஆனால் "இது நாட்டை அவமதிக்கும் செயல், மக்களை அவமதிக்கும் செயல்" என்று ஆளும் அரசாங்கத்திற்கு அல்லக்கை போல் பேசி இருப்பதுதான் கண்டனத்துக்குரியது. நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னதை விடவா விருதை திருப்பி கொடுப்பது பெருங்குற்றம்?


ஆளும் மத்திய அரசு "மதம்" என்ற பெயரால் மக்களை தூண்டிவிட்டு . இனம் மொழி பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி, கலவரங்களை தினம் தினம் ஏற்படுத்துகிறது..அதை கண்டிக்கும் வகையில் எழுத்தாளர்கள் தங்களின் விருதுகளை திருப்பி தருகிறார்கள்.. அதில் எள்ளளவும் "உங்கள் படம் வெளிவரவில்லை என்பதற்காக நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறேன்" என்று நீங்கள் சொன்ன சுயநலம் கூட இல்லை.. அவர்கள் சொன்னது மக்களுக்காக.. நீங்கள் சொன்னது உங்களுக்காக.





உங்களின் பேச்சு கண்டனத்துக்குரியது.. கருத்துரிமைக்கு எதிரானது.. எழுத்தாளர்களை அவமதிக்கும் செயலாகவே இருக்கிறது..

இன்றிலிருந்து உங்களது அதி தீவிர ரசிகன் என்ற இடத்திலிருந்து இறங்கி ஒரு பார்வையாளன் என்ற முறையில் இருக்கப்போகிறேன்..
நன்றி
அன்புடன்,
சூர்யா

Sunday, November 1, 2015

மு.க. ஸ்டாலின் என்கிற தளபதி !





கலைஞரின் குடும்பத்தில் இருந்ததால் தளபதி ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர். ஆனாலும் அவரின் அரசியல் ஈடுபாடு அவ்வளவாக இல்லையென்றாலும் 1975ம் ஆண்டு இந்திராகாந்தி அரசால் மிசா காலகட்டத்தில் தளபதி திரு ஸ்டாலின் அவர்களை கைது செய்து சித்தரவதை செய்து வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். அன்று அவர் வாங்கிய அத்தனை அடிகளும் சித்தரவதைகளையும் அவர் மீதானா மக்களின் பார்வை திரும்பியது. 




இதன் தொடர்சியாக அவர் முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்தவர் 1980 இல் மதுரையிலே உள்ள ஜான்சிராணி பூங்காவிலே அமைப்பு ரீதியாக திமுக இளைஞர் அணி தொடங்கபட்டு தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை நிறுவி அதன் மூலம் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.இன்று வரை கழகத்தின் முதுகெழும்பாய் வைத்திருக்கிறார். தளபதி பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார்.





திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டி தன் தலைமைப்பன்பை நிருபித்தார்.

ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.





மேயராக இருந்து பல மேம்பாலங்களையும் பல அரசாங்க பள்ளிகளின் நிலைகளை உயர்த்தியவர்..இரண்டுமுறை மேயராக இருந்து ஒரு முறை உள்ளாட்சித்துறை அமைச்சாஅமைச்சராகவும் , துனை முதல்வராகவும் இருந்து சென்னையில் பாதள சாக்கடை திட்டத்தை நிறுவி, மகளிர் சுய உதவுகுழுக்கள் மூலமாக பல உதவிகள் செய்து சமத்துவபுரங்களை திறந்துவைத்தார்.

திரு ஸ்டாலின் அவர்கள் ஒரே நாளில் கட்சியின் மிக பெரிய அந்தஸ்த்துக்கு வந்தவரல்ல..சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தவர்.அவருக்கான மதிப்பு கட்சிக்குள்ளும், அதை தாண்டி பொதுமக்களிடமும் மிக பெரிய அளவில் இருப்பதை பார்க்க முடியும். அரசியலில் நேர் எதிர்மறை கருத்துகொண்ட துக்ளக் சோ ராமசாமி கூட ":திரு ஸ்டாலின் அவர்களை ஒரு வாரிசு அரசியல்வாதியாக பார்க்க முடியாது..அவரின் உழைப்பு அளவிடமுடியாதது" என்று நற்சான்று வழங்கி இருக்கிறார். சுனாமி நிதியை அரசியல் எதிரியான ஜெயாவிடமே நேரில் கொடுத்து தன் மதிப்பை மேலும் உயர்த்தியவர்.





சில நாட்களுக்கு முன் பேராசிரியரின் முன்னிலையில் கலைஞர் அவர்களே தலைவர் பதவிக்கு போட்டி என்று வந்தால் "ஸ்டாலின் அவர்களை முன்னிருத்துவேன்" என்று சொன்னது அவர் அவரின் மகன் என்பதால் அல்ல..அது அவரின் உழைப்பிற்க்கு கிடைத்த வார்த்தை.





"கிராமப்புற மாணவர்கள், கிராமப்புற பெண்களின் வளர்ச்சி, நகர்பகுதி ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சி, கிராமத் தில் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சீரிய திட்டங்களைத் தீட்டுவது எனது கனவு"  ஸ்டாலின் சொல்லிய வார்த்தைகள்.. கூடிய விரைவில் முதல்வராவார் 





தளப"தீ"
என்று தெரியாமல் கைவைத்தவர்
புண்ணாகிப் போவர்
தெரிந்தே கை வைத்தவர்
மண்ணோடு மண்ணாகி போவர்..!




கலைஞருக்கு அண்ணாவின் கனையாழியும் கண்ணதாசனின் வனவாசமும்!




சென்னை மாநகர மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களை பாராட்டி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் "நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகைக் கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி. அந்த கணையாழியை வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்" என்று அண்ணா கலைஞரை பாராட்டி பேசியதை கண்ணதாசன் அவர்கள் தன் "வனவாசம்" என்ற நூலில் நானும் அதில் உழைத்தேன் , எனக்கு கனையாழி தரவில்லை, முதல் நாள் கருணாநிதி வாங்கி கொடுத்த மோதிரத்தை அடுத்த நாள் போட்டு அழகு பார்த்துகொண்டனர் என்று கீழ்த்தரமாக கலைஞரையும் அண்ணாவையும் சாடியிருந்ததை உண்மை என்று வக்காலத்து வாங்கும் தோழர்களுக்கு !

கலைஞரின் பரம எதிரி கூட ஒப்புக்கொள்ளும் விசயம் 'அவரின் கடின உழைப்பு'.
சென்னை மாநகர மன்றத் தேர்தலில் போட்டியிடேவே தயங்கிய தி.மு.கவை, அண்ணாவை சமாதானபடுத்தி  90 இடங்களில் போட்டியிட வைத்தவர் 
கலைஞர் . அண்ணாவிடம் வெற்றியை பறித்து தருகிறேன் என கலைஞர் சத்தியம் செய்து உழைத்த தேர்தல். அது தி.மு.க சந்தித்த முதல் தேர்தல்.தேர்தலில் அண்ணா முழுக்க நம்பியது கலைஞரின் உழைப்பை மட்டுமே. "வாழ்வா ? சாவா ?"தேர்தல். பெரியார் கூட எதிர்ணியில் இருக்கும் நிலை.

கலைஞரின் மூளையின் வீச்சு .சாம ,பேத ,தண்டம் அனைத்தும் உலகிற்கு உணர்த்திய தேர்தல். மாபெரும் காங்கிரஸ் இயக்கைத்தை, திமுக தேர்தலில் ஒன்றும் தேறாது என்று கருதியிருந்த அண்ணா முன்னால் 45 பேரை ஜெயிக்க வைத்து மண்ணைக்கவ்வ வைத்த கலைஞரின் அரசியல் ராஜதந்திரம் படிக்க பொறுமை போதாது.கட்சிக்குள் பிரச்னை வரும்போது, அண்ணாவிடம் சொல்லாமலே சமாளித்துவிட்டு, பிறகு அண்ணாவிடம் சொல்லும் போர்ப்படை தளபதி கலைஞர்.

கலைஞரும் அண்ணாவும் என்ன ஜெ ,சசியா ? அவரை மட்டும் சிறப்பிக்க ? கண்ணதாசன் நல்ல கவி,மனிதன், யாருக்கும் பயப்படாத நல்ல சிந்தனையாளன். ஆனால் மகா குடிகாரர் .அவரே ஒத்துக்கொண்டது & பெண் இல்லாமல் .......? உழைக்கவெல்லாம் மாட்டார். சுகவாசி. "நான் அனுபவிக்காத போதை இல்லை உலகில் நான் அனுபவிக்காத நாட்டுப்பெண் இல்லை" என சொன்ன ஒருவர் எப்படி உழைத்திருப்பார் ? எப்படி அவருக்கு கணையாழி அணிவிக்க முடியும் ? மற்றவன் எப்படி அனுமதிப்பான் ? கலைஞருக்கு அணிவித்ததை எப்படி மற்ற எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் ?கண்ணதாசன் தவிர ?யோசித்தால் புரியும்

#வனவாசம் - போதையில் எழுதப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் தொகுப்பு..!



முக நூலில் 2012ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி எழுதியது 

அதன் முகநூல் லிங்க் 

https://www.facebook.com/photo.php?fbid=3319028927771&set=a.1571712965964.2074714.1029710751&type=3&theater

Thursday, October 29, 2015

கலைஞரின் மஞ்சள் துண்டும் அதன் வரலாறும்

கலைஞரை வசைபாட நினைப்போர் அதிகமாக உபயோகிக்கும் வார்த்த மஞ்ச துண்டு..
சரி ஏன் வந்தது ? ஏதற்க்காக வந்தது?? அந்த மஞ்ச துண்டின் வரலாறு என்ன??? இதற்கு எல்லாம் கலைஞரை விட வன்னிய சங்க நிறுவனர் டாக்டர் ராமதாசிற்கு மிக நன்றாக தெரியும்.

80களில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டிற்காக பல போராட்டங்களை செய்து கொண்டிருந்தர்கள். மரம் வெட்டினார்கள், கடுமையான போராட்டங்கள். இருந்தும் மறைந்த திரு MGR ஆட்சியில் ஒன்றும் கிடைக்கவில்லை..பல கைதுகள், பலருக்கு குண்டர் சட்டம்..
சரி அடுத்து கவர்னர் ஆட்சி..அதிலும் வன்னியர்கள் போராட்டத்தில் வன்னியர்கள் தாக்கப்பட்டனர். வன்னியர்களும் திருப்பி தாக்கினார்கள். பல பேர் பாதிக்கப்பட்டனர்..

திரும்பவும் கலைஞர் ஆட்சி 1989ம் ஆண்டு வந்தது..வந்தவுடன் முதல் அரசானையாய் மிகவும் பிற்படுத்தபட்டவர் பட்டியல் என்று ஒன்று வெளியிட்டு அதில் வன்னியர்களையும் இனைத்து 20 சதவீதம் கொடுத்தார்..வன்னியர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்..

அதன் விளைவாக அப்போது வன்னியர் சங்க நிறுவனரான திரு ராமதாஸ் அவரகள் திண்டிவனத்தில் கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்..அதில் ராமதாஸ் "வன்னியர் சங்கத்தின் கொடியை பார்தீர்களேயானால் மஞ்சள் கொடியில் அக்னி சட்டி இருக்கும்..மஞ்சள் நிறம் வன்னியர்களின் நிறம்..வன்னியரின் ஆத்தாம்ர்த்த மஞ்சள் நிறத்தை கொண்ட துண்டை, எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்த சமூக போராளிக்கு போர்த்துவதில் பெரு மகிழ்ச்கி அடைகிறேன்" வெகுவாக என்று மஞ்சள் துண்டை போர்த்தினார்..



அன்று ராமதாசால் போடப்பட்ட மஞ்சள் துண்டு கலைஞருக்கு பிடித்து போய்விட்டது..சிலருக்கு சில நேரங்களில் சிலது பிடித்து போய்விடும்.அதுபோல அதிலிருந்து மஞ்சள் துண்டை போட ஆரம்பித்தார்.1989ம் ஆண்டுக்கு முன் அவர் மஞ்சள் துண்டை அனிந்ததே இல்லை..

இந்த வரலாறு தெரியாமால், "மஞ்ச துண்டு, மஞ்ச துண்டு" என்று கிண்டல் கேலி பேசும் பலர் அந்த நேரத்தில் சிறுவராகவே இருந்துருப்பீர்கள்..இது தெரிய வாய்ப்பில்லை,,ஏன் இன்று இருக்கும் பல திமுக உடன்பிறப்புக்களுக்கு கூட தெரியாது.

நீங்கள் சொல்வதைபோல் போலி நாத்திகவாதியாய் கலைஞர் தன்னை நடித்துகொண்டிருப்பாராயேனால், இந்த மஞ்ச துண்டையும் இவ்வளவு விமர்சனகளுக்கு இடையில் தூக்கி வீசி எரிந்து, போலியாய் தன்னை காட்டி இருக்க முடியும்.அடுத்தவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்..என் மனதிற்க்கு இது மஞ்சள் துண்டு அருமையாய் இருக்கிறது, அடுத்தவர் விமர்சனம் செய்வதை பற்றி கவலை இல்லைன்ற தன் பகுத்தறிவால் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து மஞ்சள் துண்டையே அனிந்து கொண்டிருக்கிறார்...

கலைஞர் கொடுத்த அந்த 20 சதவீத இடஒதுக்கீட்டால் இன்று வன்னியர்களில் பலர், டாக்டர்களாகவும், எஞ்சினியர்களாகவும், மெத்த படித்தவர்களாகவும் இருக்கிறார்கள்..
கலைஞரின் மஞ்சள் துண்டு என்பது , என்னை பொருத்தவரை ஒரு சமூக நீதிக்காக அவருக்கு கிடைத்த ஒரு சின்னம்..

"கலைஞரின் மஞ்சள் துண்டு என்பது ஆத்திகம் அல்ல, அது சமூக நீதியின் சின்னம்"

முக நூலில் 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி என்னால் எழுதப்பட்டது ..

அதன் லிங்க்
https://www.facebook.com/photo.php?fbid=3237294004449&set=a.1571712965964.2074714.1029710751&type=3&theater

இளைய மகன் அகில்

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு சேர்ந்ததும் இரண்டாவது படிக்கும் எனது இளைய மகன் அகில் ஓடிவந்து,
"அப்பா, இன்னைக்கு என் கிளாஸ்ல ஒரு விஷயம் நடந்துச்சி" என்று துள்ளலுடன் கூறினான்.
"என்ன செல்லம் நடந்துச்சி" என்று கேட்டபடியே வீட்டின் உள்ளே நுழைந்தேன்.
"அப்பா, என் கிளாஸ்ல திவாகர் இருக்கான்ல, அவன் குறும்பு பண்ணான், உடனே எங்க மிஸ் அவனை வெளியே அனுப்பி நிக்க வச்சிட்டாங்க" என்று சோகமாக கூறினான்..
"ஓ, அப்படியா, என்ன செஞ்சான் அவன்? " இது நான்
"அவன் பக்கத்துல இருந்த என்னோட இன்னொரு ஃபிரண்டின் பென்சிலை தூக்கி வீசிட்டான், அதை மிஸ் பார்த்துட்டாங்க, அதான் கோவம் வந்து வெளிய நிக்க வச்சிட்டாங்க" என்று கூறினான்..
இவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் "சரி, அப்பறம் என்ன நடந்தது" என்று கேட்டேன்..
அதற்கு அவன்," அப்பா அவனை வெளிய நிக்க வச்ச உடனே எனக்கு ரொம்ப கஷ்டமாயிடிச்சி, 'என்னடா பண்ணலாம்'னு யோசிச்சேன்.. ஒரு யோசனை வந்தது..உடனே மிஸ் கிட்ட," மிஸ் அவன் செஞ்சது சின்ன தப்புதான், அவனை உள்ள கூப்பிட்டு உக்கார வையுங்க" என்று சொன்னேன்..
உடனே மிஸ்," தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கனும், அவன் வெளியவே நிக்கட்டும் "ன்னு சொன்னாங்க ..
நான் உடனே மிஸ்கிட்ட, "மிஸ் அவன் சின்ன பையன்தானே.. அவன் செஞ்சது தப்புதான், தெரியாம செஞ்சிட்டான், அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன், ப்ளீஸ் அவனை உள்ள கூப்பிடுங்க" என்று சொன்னேன்..
உடனே மிஸ் பயங்கரமா சிரிச்சிட்டு என் கண்ணத்தை தட்டி கொடுத்து, "பரவாயில்லையே, இந்த சின்ன வயசுல நல்ல விஷயம் பண்ற" ன்னு சொன்னாங்க..
இந்த இடத்தில் நானும் என் மனைவியும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டோம் ..அவன் தொடர்ந்து
"எங்கப்பா இப்படிதான் சொல்லி கொடுத்துருக்காரு"ன்னு சொன்னேன்..உடனே மிஸ்" சூப்பர்" என்று சொல்லிவிட்டு அவனை உள்ளே கூப்பிட்டு கிளாசில் உட்க்கார வைத்து விட்டு, என்னக்கு ஒரு சின்ன கிஃப்ட் கொடுத்தாங்க"
"மிஸ் எனக்கு இது எல்லாம் வேனாம்"ன்னு சொன்னேன்..
அதுக்கு அவங்க," இல்லடா, நீ நல்ல விஷயம் பன்ன, அதான் கொடுக்கிறேன்"ன்னு சொன்னாங்க..
நான் உடனே மிஸ் கிட்ட," மிஸ் நான் என் கடமையை தான் செய்தேன், எனக்கு இது வேண்டாம்"ன்னு சொல்லிட்டேன்ப்பா " என்று அக மகிழ்வுடன் பெருமிதமாக கூறி முடித்தான்..
எனக்கும் என் மனைவிக்கும் அடக்க முடியாத சிரிப்பு, கொஞ்சம் கர்வமுடன்..
இதைத்தானே குழந்தைகளிடம் எதிர்ப்பார்க்கிறோம்..
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

கலைஞரும் கச்ச தீவும்!

கச்சதீவு கலைஞரால் தான் தாரை வார்க்கப்பட்டது என்று பொய்யும் புரட்டும் பேசிவருபவர்களுக்கு கச்ச தீவை மீட்டெடுப்பதற்காக தற்போது ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு எடுத்து வைத்த வாதமே "கலைஞருக்கும் கச்ச தீவு நம் கைவிட்டு போனதற்கும் சம்மந்தமே இல்லை" என்று நிருபணமாகிறது. தமிழக அரசு எடுத்து வைத்த வாதம் இதுதான்
--------------------------------------------------------------------------------
"மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அந்த மாநிலத்தின் ஒரு பகுதியை மத்திய அரசு வேறு நாட்டுக்கு வழங்கினால் அது செல்லாது" என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஆகையால் அன்றைய தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி , தமிழ அரசின் ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு, கச்ச தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு" என்றும் அதற்கு ஆதாரமாக அன்றைய திமுக ஆட்சியால் "கச்சதீவை கொடுக்ககூடாது" என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே காட்டியுள்ளனர்.
--------------------------------------------------------------------------------
ஆகையால் உண்மை இப்படி இருக்க திமுகவை வசைபாட, கலைஞரை திட்ட கச்ச தீவை கலைஞர் தாரை வார்த்தார் என்று புளுகுகிறார்கள்.
அன்று கட்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது கலைஞர் அது சம்பந்தமாக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத இரண்டு கட்சிகள், ஒன்று காங்கிரஸ் மற்றொன்று அதிமுக.

அதே போல் கச்ச தீவை இலங்கையிடம் கொடுப்பதற்கு காரணமாயிருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து அதற்கு துனைபோனவர்தான் இன்று கச்ச தீவு வேண்டும் என்று அடம் பிடிக்கும் பழ. நெடுமாறன். ஆனால் அப்போது கச்ச தீவை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞரால் பல இடங்களில் கண்டன ஆர்பாட்டங்களும் கூட்டங்களும் நடத்தப்பட்டன.. இணைப்பை பாருங்கள்

வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்.. எவரோ சொன்னால் ஆட்டுமந்தகளாக பின்னால் ஆமாம் சாமி போடாதீர்கள்..