Thursday, October 29, 2015

இளைய மகன் அகில்

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு சேர்ந்ததும் இரண்டாவது படிக்கும் எனது இளைய மகன் அகில் ஓடிவந்து,
"அப்பா, இன்னைக்கு என் கிளாஸ்ல ஒரு விஷயம் நடந்துச்சி" என்று துள்ளலுடன் கூறினான்.
"என்ன செல்லம் நடந்துச்சி" என்று கேட்டபடியே வீட்டின் உள்ளே நுழைந்தேன்.
"அப்பா, என் கிளாஸ்ல திவாகர் இருக்கான்ல, அவன் குறும்பு பண்ணான், உடனே எங்க மிஸ் அவனை வெளியே அனுப்பி நிக்க வச்சிட்டாங்க" என்று சோகமாக கூறினான்..
"ஓ, அப்படியா, என்ன செஞ்சான் அவன்? " இது நான்
"அவன் பக்கத்துல இருந்த என்னோட இன்னொரு ஃபிரண்டின் பென்சிலை தூக்கி வீசிட்டான், அதை மிஸ் பார்த்துட்டாங்க, அதான் கோவம் வந்து வெளிய நிக்க வச்சிட்டாங்க" என்று கூறினான்..
இவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் "சரி, அப்பறம் என்ன நடந்தது" என்று கேட்டேன்..
அதற்கு அவன்," அப்பா அவனை வெளிய நிக்க வச்ச உடனே எனக்கு ரொம்ப கஷ்டமாயிடிச்சி, 'என்னடா பண்ணலாம்'னு யோசிச்சேன்.. ஒரு யோசனை வந்தது..உடனே மிஸ் கிட்ட," மிஸ் அவன் செஞ்சது சின்ன தப்புதான், அவனை உள்ள கூப்பிட்டு உக்கார வையுங்க" என்று சொன்னேன்..
உடனே மிஸ்," தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கனும், அவன் வெளியவே நிக்கட்டும் "ன்னு சொன்னாங்க ..
நான் உடனே மிஸ்கிட்ட, "மிஸ் அவன் சின்ன பையன்தானே.. அவன் செஞ்சது தப்புதான், தெரியாம செஞ்சிட்டான், அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன், ப்ளீஸ் அவனை உள்ள கூப்பிடுங்க" என்று சொன்னேன்..
உடனே மிஸ் பயங்கரமா சிரிச்சிட்டு என் கண்ணத்தை தட்டி கொடுத்து, "பரவாயில்லையே, இந்த சின்ன வயசுல நல்ல விஷயம் பண்ற" ன்னு சொன்னாங்க..
இந்த இடத்தில் நானும் என் மனைவியும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டோம் ..அவன் தொடர்ந்து
"எங்கப்பா இப்படிதான் சொல்லி கொடுத்துருக்காரு"ன்னு சொன்னேன்..உடனே மிஸ்" சூப்பர்" என்று சொல்லிவிட்டு அவனை உள்ளே கூப்பிட்டு கிளாசில் உட்க்கார வைத்து விட்டு, என்னக்கு ஒரு சின்ன கிஃப்ட் கொடுத்தாங்க"
"மிஸ் எனக்கு இது எல்லாம் வேனாம்"ன்னு சொன்னேன்..
அதுக்கு அவங்க," இல்லடா, நீ நல்ல விஷயம் பன்ன, அதான் கொடுக்கிறேன்"ன்னு சொன்னாங்க..
நான் உடனே மிஸ் கிட்ட," மிஸ் நான் என் கடமையை தான் செய்தேன், எனக்கு இது வேண்டாம்"ன்னு சொல்லிட்டேன்ப்பா " என்று அக மகிழ்வுடன் பெருமிதமாக கூறி முடித்தான்..
எனக்கும் என் மனைவிக்கும் அடக்க முடியாத சிரிப்பு, கொஞ்சம் கர்வமுடன்..
இதைத்தானே குழந்தைகளிடம் எதிர்ப்பார்க்கிறோம்..
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

2 comments:

  1. அருமை.உங்கள் செல்வத்துக்கு நிறைய படிக்க சொல்லுங்கள். திமுகா வுக்கு தேவைப்படுவார்.

    ReplyDelete
  2. அருமை.உங்கள் செல்வத்துக்கு நிறைய படிக்க சொல்லுங்கள். திமுகா வுக்கு தேவைப்படுவார்.

    ReplyDelete