Thursday, October 29, 2015

கலைஞரும் கச்ச தீவும்!

கச்சதீவு கலைஞரால் தான் தாரை வார்க்கப்பட்டது என்று பொய்யும் புரட்டும் பேசிவருபவர்களுக்கு கச்ச தீவை மீட்டெடுப்பதற்காக தற்போது ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு எடுத்து வைத்த வாதமே "கலைஞருக்கும் கச்ச தீவு நம் கைவிட்டு போனதற்கும் சம்மந்தமே இல்லை" என்று நிருபணமாகிறது. தமிழக அரசு எடுத்து வைத்த வாதம் இதுதான்
--------------------------------------------------------------------------------
"மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அந்த மாநிலத்தின் ஒரு பகுதியை மத்திய அரசு வேறு நாட்டுக்கு வழங்கினால் அது செல்லாது" என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஆகையால் அன்றைய தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி , தமிழ அரசின் ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு, கச்ச தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு" என்றும் அதற்கு ஆதாரமாக அன்றைய திமுக ஆட்சியால் "கச்சதீவை கொடுக்ககூடாது" என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே காட்டியுள்ளனர்.
--------------------------------------------------------------------------------
ஆகையால் உண்மை இப்படி இருக்க திமுகவை வசைபாட, கலைஞரை திட்ட கச்ச தீவை கலைஞர் தாரை வார்த்தார் என்று புளுகுகிறார்கள்.
அன்று கட்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது கலைஞர் அது சம்பந்தமாக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத இரண்டு கட்சிகள், ஒன்று காங்கிரஸ் மற்றொன்று அதிமுக.

அதே போல் கச்ச தீவை இலங்கையிடம் கொடுப்பதற்கு காரணமாயிருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து அதற்கு துனைபோனவர்தான் இன்று கச்ச தீவு வேண்டும் என்று அடம் பிடிக்கும் பழ. நெடுமாறன். ஆனால் அப்போது கச்ச தீவை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞரால் பல இடங்களில் கண்டன ஆர்பாட்டங்களும் கூட்டங்களும் நடத்தப்பட்டன.. இணைப்பை பாருங்கள்

வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்.. எவரோ சொன்னால் ஆட்டுமந்தகளாக பின்னால் ஆமாம் சாமி போடாதீர்கள்..

5 comments:

  1. வாழ்த்துகள். தொடரட்டும் தூய பணி

    ReplyDelete
  2. வாழ்த்துகள். தொடரட்டும் தூய பணி

    ReplyDelete
  3. தங்கள் வலைப் பூங்கா பூத்துக்குலுங்கட்டும் வரவேற்கிறோம்

    ReplyDelete
  4. தங்கள் வலைப் பூங்கா பூத்துக்குலுங்கட்டும் வரவேற்கிறோம்

    ReplyDelete
  5. வேசிக்குடும்பத்தை சேர்ந்த கருணாநிதி எப்படி வேசிகளை பணம் தராமல் ஏமாற்றி அவர்கள் பணத்தையும் அடித்து பறித்ததை கண்ணதாசன் வனவாசத்தில் விவரித்து எழுதியிருந்தார் . திருட்டு ரயில் ஏறி வந்த படிக்காத திருட்டு கருணா சாதாரண கதாசிரியராக இருந்து தன் கொள்ளையடிக்கும் திறனால் அரசியலில் நுழைந்து ஆசியாவிலேயே செல்வந்தனாக மாறினான்

    ReplyDelete