Monday, May 30, 2016

வைக்கோலாய் எரியும்!

அரசியல் அனாதை வைகோவின் துரோகம் பற்றி கலைஞர் கவிதை!




















ஊமையாக இரு என்றால்
என் பேச்சைக் கேட்காமல்
உளரித் தொலைத்துவிட்டு
ஓராண்டா இராண்டா எனத் தெரியாமல்
உள்ளே இருக்கின்ற மனுஷனையே
மெல்ல வெளியே கொண்டுவர
ஒரு கோடி கையெழுத்து எமக்கு தேவை
என எத்தனை கனிவோடு பணிவோடு
எல்.ஜி.என்பார் என்னை அனுகினார் அன்று!





















இன்றோ நீ என்மேல் எடுத்து வீசுவேன்
பிரம்மாஸ்திரம் என்று பிதற்றி திரிகின்றாய்.
எத்தனை அஸ்திரங்கள் துளைத்த இதயம்பார் இது.
அத்தனையும் முனைமழுங்கிப் போனதேயன்றி
சொத்தை பல் விழுவது போல் என் சுயசரிதை
பொத்தென்று வீழ்ந்ததில்லை வீடணாரே புரிந்து கொள்க!
பல தகவல்கள் கைவசம் உண்டென்கிறீர்
சில தகவல் உம்மைப்பற்றிச் சொன்னாலே சிரிக்கும் உலகம்.


அரசியல் அநாதை வைகோ 


























அன்றொருநாள் குமரிக்கடல் விடுதியிலே
ஆர்க்காட்டார் துரைமுருகன் இருவரிடமும்
அடுத்த தலைவர் தி.மு.க வில் நான்தானென்று
அவர்களிருவரையும் அயர வைத்த நேரம் அது
அவசரப்படாமல் பொறுத்திடுக.
ஆகலாம் தலைவராக அண்ணன்
கலைஞரின் காலத்திற்குப் பின்னால் என
நயமுடன் அவர்கள் உரைத்த போது
"அண்ணன் கலைஞர் அய்யா பெரியார் போல்
அந்த மூதறிஞர் ராஜாஜி போல் ஆயுள் தொண்ணூறுக்கு மேலும்
உயிரோடு இருந்து விட்டால்?" என்று
பதைத்துப்போய் நீவிர் கேட்க, கேள்வியை
புதைத்து வைத்து ஈராண்டுக்குப் பின்
அவர்கள் வெளியிட்ட சேதி கூட நான்கு
சுவர்களுக்குள்தான் இதுவரை இருந்தது.
இன்று நீர் பிரம்மாஸ்திரம் பிதற்றல் காட்டியதால்
நன்று நாமும் ஒரு அஸ்திரம் விடலாமென்று
உதாரணத்திற்கு ஒன்றை எடுத்து விட்டுள்ளேன் - இன்னும்
ஓராயிரம் கணைகளுண்டு, உமக்கே தெரியும்,
உண்மைகள் பற்பல விரியும் - உம்
பொய்மைகள் தீயிட்ட - வைக்கோலாய் எரியும்!




1 comment:

  1. வேசிக்குடும்பத்தை சேர்ந்த கருணாநிதி எப்படி வேசிகளை பணம் தராமல் ஏமாற்றி அவர்கள் பணத்தையும் அடித்து பறித்ததை கண்ணதாசன் வனவாசத்தில் விவரித்து எழுதியிருந்தார் . திருட்டு ரயில் ஏறி வந்த படிக்காத திருட்டு கருணா சாதாரண கதாசிரியராக இருந்து தன் கொள்ளையடிக்கும் திறனால் அரசியலில் நுழைந்து ஆசியாவிலேயே செல்வந்தனாக மாறினான்

    ReplyDelete